தருவைக்குளத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா துவக்கி வைத்தார்.

தருவைக்குளத்தில்  கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் -  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மூலம் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையை வழங்கி பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வழிமுறைகளை பார்வையிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் வட்டாட்சியர் ஆனந்த மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வட்டார மருத்துவ அலுவலர் அன்புமாலதி சிறப்பு மருத்துவ அலுவலர்கள் ஐஸ்வர்யா ரேவதி சரிதா நிவேதா நாகராஜன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து சுகாதார ஆய்வாளர்கள் பெரியசாமி ஆழ்வார் பாபு பங்குத்தந்தை அருட்தந்தை.வின்சென்ட் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார் காடோடி ஒன்றிய இளைஞரணி அனிட்டன் மாயகிருஷ்ணன் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம் தயாளன் பாலமுருகன்மனோகரன் பிரஸ்நேவ் மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள், செவிலியர்கள்,கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.