தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அண்ணாநகர் 7 வது தெரு பகுதியில் இருந்து அமைதி பேரணி அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது இந்த பேரணி அண்ணா நகர் பகுதியில் தொடங்கி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கம் வரை சென்று நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மாநகர செயளாலர் ஆனந்த சேகரன் துணை மேயர் ஜெனிட்டா மண்டல தலைவர்கள் பாலகுருசாமி நிர்மல்ராஜ் அன்னலட்சுமி கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் ராமகிருஷ்ணன் சுரேஷ்குமார் பொன்னப்பன் இசக்கிராஜா பட்சிராஜ் சுயம்பு கந்தசாமி வைதேகி சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.