தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் நகரக் கிளை தொடக்க விழா நடைபெற்றது. புதிய நகரக் கிளையை அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசியச் செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்து, தொழிற்சங்கக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.

விழாவில் பங்கேற்க தூத்துக்குடிக்கு வருகை தந்த தேசியச் செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவருக்கு, தொழிற்சங்க நகரக் கிளை சார்பில் வெடி வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளைத் தலைவர் வீரபொம்மதுரை, கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சுரேஷ் தேவருக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சங்கத்தின் புதிய நகரக் கிளை தொடங்கப்பட்டதுடன், நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மத்திய சங்கத் தலைவர் ராஜராஜன், மத்திய சங்க பொதுச் செயலாளர் முருகேஷ், மத்திய சங்க பொருளாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிளைத் தலைவர் வீரபொம்மதுரை, செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் சக்திவேல், துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர் சங்கரசுப்பு, இணைச் செயலாளர் காசி சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, சேர்ந்தையா பிள்ளை, கனகராஜ், செல்வகுமார், குருநாத பாண்டியன், சேட்டையன், விபத்துக் குழு பிரிவைச் சேர்ந்த செல்வகுமார், பன்னீர்கை பெருமாள், சட்ட ஆலோசகர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது