Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

சங்கரப்பேரியில் சிதிலமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது பல ஆண்டுகால கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி

Admin 4 days ago தூத்துக்குடி
கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி, செப்.26: 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், கட்டிடங்கள் இன்று இடித்து அகற்றப்பட உள்ளன.
1790394209_1005348347.jpg
சங்கரப்பேரி பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு ஊழியர் வாடகை குடியிருப்பில் மொத்தம் 270 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் கட்டிடங்கள் சேதமடைந்து, சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால், குடியிருப்புகள் பயன்பாடின்றி விடப்பட்டன. மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்கள் வசிக்காமல் கிடந்த இந்த குடியிருப்பு வளாகத்தில் கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து, முட்புதர்கள் மற்றும் மரங்கள் வளர்ந்து பாழடைந்த நிலையில் காணப்பட்டன. பல இடங்களில் காம்பவுண்டு சுவர்களும் சேதமடைந்திருந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர்.

மேலும், பாழடைந்த கட்டிடங்களுக்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதுடன், ஆள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அப்பகுதிக்குள் வந்து செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், இந்த சிதிலமடைந்த கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மாநகராட்சி 3-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ரெங்கசாமி, பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, தற்போது இந்த சிதிலமடைந்த குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்காக முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி இன்று நடைபெற உள்ளது.

சிதிலமடைந்த கட்டிடங்கள் அகற்றப்படுவதால், அப்பகுதியில் நிலவி வந்த அச்சம் நீங்கி பாதுகாப்பான சூழல் உருவாகும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ரெங்கசாமி மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன், தங்களது மகிழ்ச்சியையும் கவுன்சிலர் ரெங்கசாமியிடம் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

11 hours ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

1 day ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

3 days ago

தவெக ஆட்சியில் தொடர்ந்து முடிவுகள் வாபஸ்: நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? – அண்ணாமலை கேள்வி

3 days ago

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

4 days ago

தூத்துக்குடியில் டெங்கு தடுப்பு, தூய்மை பணி - ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்