Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

Admin 4 days ago தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிப்பு
தாராபுரம், செப்.26:

 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் திருமதி சுகன்யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கொளத்துப்பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொளத்துப்பாளையம் பகுதியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்ற கீதா ஜீவன், பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்களிடம் வேட்பாளரின் தேர்தல் பிரசாரம் மற்றும் கழகத்தின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார்.1790395152_1005348449.jpg

தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கீதா ஜீவன், அவற்றை தொடர்புடைய நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பில் உள்ளூர் திமுக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று சுகன்யாவுக்கு ஆதரவு திரட்டினர். பொதுமக்களும் கீதா ஜீவனிடம் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

11 hours ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

1 day ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

3 days ago

தவெக ஆட்சியில் தொடர்ந்து முடிவுகள் வாபஸ்: நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? – அண்ணாமலை கேள்வி

3 days ago

சங்கரப்பேரியில் சிதிலமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது பல ஆண்டுகால கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி

4 days ago

தூத்துக்குடியில் டெங்கு தடுப்பு, தூய்மை பணி - ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்