Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் டெங்கு தடுப்பு, தூய்மை பணி - ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு

Admin 4 days ago தூத்துக்குடி
தூத்துக்குடி 39-வது வார்டில் டெங்கு தடுப்பு, தூய்மை பணிகள்: மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு
தூத்துக்குடி, செப்.26: 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகள், கழிவுநீர் அகற்றும் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.1790389578_1005348118.jpg

மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றும் பணிகள், குப்பைகளை முறையாக சேகரித்து அகற்றுதல் உள்ளிட்ட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
1790389587_1005348119.jpg
மேலும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பணிகள் முறையாகவும் தொடர்ந்து நடைபெறுவதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

11 hours ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

1 day ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

3 days ago

தவெக ஆட்சியில் தொடர்ந்து முடிவுகள் வாபஸ்: நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? – அண்ணாமலை கேள்வி

3 days ago

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

4 days ago

சங்கரப்பேரியில் சிதிலமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது பல ஆண்டுகால கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்