Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தவெக ஆட்சியில் தொடர்ந்து முடிவுகள் வாபஸ்: நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? – அண்ணாமலை கேள்வி

Admin 3 days ago தூத்துக்குடி
முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? - அண்ணாமலை
சென்னை செப்.27: 

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து மாதங்களில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எதிர்ப்புகள் எழுந்த பின்னர் திரும்பப் பெறப்படுவது, தமிழக நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் முதலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அவை மாற்றப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறுவதில் விலக்கு அளிப்பது தொடர்பான நடவடிக்கையும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுபோன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் திரும்பப் பெறப்படும் நிலை தொடர்வது, அரசின் முடிவெடுக்கும் நடைமுறை குறித்து கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒவ்வொரு முக்கிய முடிவும் முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? அல்லது முதலமைச்சருக்கு தெரியாமலேயே அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு அவற்றைத் திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அதன் சட்டரீதியான அம்சங்கள், நிர்வாக நடைமுறைகள், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். எனவே, ஒவ்வொரு முடிவையும் முன்கூட்டியே முழுமையாக பரிசீலித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் யார் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முடிவெடுக்கும் நடைமுறைகள் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

11 hours ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

1 day ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

3 days ago

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

4 days ago

சங்கரப்பேரியில் சிதிலமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது பல ஆண்டுகால கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி

4 days ago

தூத்துக்குடியில் டெங்கு தடுப்பு, தூய்மை பணி - ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்