Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

Admin 1 week ago தூத்துக்குடி
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வேட்பாளர் கீதாஜீவனுக்கு ஆர்த்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி, ஏப். 5:

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன், நகரின் 53 மற்றும் 54வது வார்டுகளில் சனிக்கிழமை தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தோப்புத் தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, முஸ்லிம் தெரு, காளியம்மன் கோவில் தெரு, அய்யன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வேட்பாளர் கீதாஜீவனுக்கு ஆர்த்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் ஏ.பி.சி.வி. சண்முகம், சகாயராஜ், தனலட்சுமி, தயாள லிங்கம், சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதிச் செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், வட்டச் செயலாளர் மனோகரன், மாநகர மகளிர் அணி ஜெயக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

5 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்