Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

Admin 1 week ago தூத்துக்குடி
நான் எந்த பதவியிலும் இல்லாத சாதாரண அதிமுக தொண்டனாக இருந்தபோதிலும், நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன்
தூத்துக்குடி, ஏப். 4 –
தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற அமைச்சர் கீதா ஜீவனின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அந்த நேரத்தில் நான் எந்த பதவியிலும் இல்லாத சாதாரண அதிமுக தொண்டனாக இருந்தபோதிலும், நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி மக்களுடன் இருந்து அவர்களின் துயரை பகிர்ந்தேன்.

இந்நிலையில், நான் கட்சியில் இணைத்த ஒரு இளைஞரை தூண்டிவிட்டு, அமைச்சர் எனக்கு எதிராக வீடியோ பதிவு செய்ய வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த வீடியோவில் நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் பல இருக்கும் நிலையில், அவற்றை தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இவ்வாறான பேச்சுக்களில் ஈடுபடுவது ஏமாற்றமளிக்கிறது.

அந்த காலகட்டத்தில் நான் அமைச்சராக இல்லாவிட்டாலும், மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளை செய்தேன். ஆனால், அமைச்சராக இருந்தவர் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்யாமல் தற்போது என்னை குற்றம் சாட்டுவது அரசியல் நோக்கத்துடன் நடைபெறும் செயல்.

எனவே, உண்மையை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்; அரசியல் ஆதாயத்திற்காக கூறப்படும் தவறான குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்று சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

5 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்