Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

Admin 1 week ago தூத்துக்குடி
அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் முன்னிலை பெறக்கூடும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தூத்துக்குடி ஏப்ரல் 06;

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. தொழில் வளம் குறைந்து, மானாவாரி விவசாயம் சார்ந்த பகுதியாகக் காணப்படும் இந்தத் தொகுதி, சமூக மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ் களம் காண்கிறார். அவர், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால், அவருக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக ராமஜெயம் போட்டியிடுகிறார். ஆனால், தற்போதைய எம்எல்ஏ சண்முகையாவிற்கு இம்முறை கட்சி தலைமையால் சீட் வழங்கப்படாதது உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரது ஆதரவாளர்கள் சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினர். பின்னர் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து போட்டியிட முயன்றாலும் அது சாத்தியமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்முகையாவின் ஆதரவாளர்கள் திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு முழுமையாக பணியாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், தமிழக வெற்றி கழகம் சார்பில் மதன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது என்பதால், அவர்களுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேபோல், நாம் தமிழர் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பல்முனைப் போட்டி நிலவும் நிலையில், திமுக வேட்பாளருக்கு உள்ள ஆதரவு முழுமையாக இல்லாத பட்சத்தில், அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் முன்னிலை பெறக்கூடும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், இறுதி முடிவு வாக்காளர்களின் தீர்ப்பில் தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

5 days ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்