Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

Admin 1 week ago தூத்துக்குடி
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அதிமுகாவின் நோக்கம்” -சி த செல்லபாண்டியன்

தூத்துக்குடி ஏப்ரல் 05;


தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் தேசிய கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரம், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.


கூட்டத்தில் பேசிய சி.த. செல்லப்பாண்டியன், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது நடவடிக்கையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்களின் நோக்கம்” என்றார்.

மேலும் அவர், “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.10,000, மகளிருக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

அதே நேரத்தில், தற்போதைய திமுக அரசை விமர்சித்த அவர், “தேர்தல் வாக்குறுதிகளில் பல இன்னும் நிறைவேறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டன; அதேபோல் மீண்டும் மக்கள் நல ஆட்சி கொண்டு வரப்படும்” என அரசியல் குறிப்பு செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் தேசிய கூட்டணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

5 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்