Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

Admin 2 weeks ago தூத்துக்குடி
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை 2027 டிசம்பர் 31 வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும் - வீ த லீடர் அண்ணாமலை
புதுக்கோட்டை, ஜூலை 21:

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பணிக்காலத்தை உடனடியாக நீட்டித்து, நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் நில எடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலம் கடந்த 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. திட்டப் பணிகள் தடையின்றி தொடரும் வகையில், 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி கடந்த மார்ச் 20-ஆம் தேதி தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை வெளியிடப்படாததால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான ரூ.66.52 லட்சம் நிதியை விடுவிக்க கடந்த மே 12-ஆம் தேதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல், திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை 2027 டிசம்பர் 31 வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்குவதற்குத் தேவையான ரூ.66.52 லட்சம் நிதியையும் உடனடியாக விடுவித்து, ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

"போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

3 days ago

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4 days ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடி

1 week ago

testing

1 week ago

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்; மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்: தூத்துக்குடியில் டாக்டர் செல்லக்குமார் பேட்டி

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்