Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடி

Admin 1 week ago தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 34.97 சதவீதம் அதிகரித்து ரூ.411.51 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வாக இயக்குனர் சலி எஸ்.நாயர்
தூத்துக்குடி, ஜூலை 28:

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.411.51 கோடி நிகர லாபம் ஈட்டி சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், ஜூன் 30, 2026-இல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சலி எஸ். நாயர் வெளியிட்டார்.

வங்கியின் மொத்த வணிகம் 23.04 சதவீதம் உயர்ந்து ரூ.1,21,715 கோடியாகவும், மொத்த வைப்புத்தொகை ரூ.64,409 கோடியாகவும், கடன் வழங்கல் ரூ.57,306 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 34.97 சதவீதம் அதிகரித்து ரூ.411.51 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், மொத்த வாராக்கடன் 0.69 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.17 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு காலாண்டில் புதிதாக 6 கிளைகள் மற்றும் ஒரு மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 628 கிளைகள், 13 மண்டல அலுவலகங்கள் மூலம் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

"போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

3 days ago

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4 days ago

testing

1 week ago

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்; மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்: தூத்துக்குடியில் டாக்டர் செல்லக்குமார் பேட்டி

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்