Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Admin 4 days ago தூத்துக்குடி
கரூரில் அப்போதைய தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிப் பார்க்காமல் புறமுதுகு காட்டிச் சென்றவர்கள்
தூத்துக்குடி, ஆக. 1:

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது தந்தை பெரியசாமி, தன்னை மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசியல் நாகரிகமின்றி அவதூறாக விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தூத்துக்குடியில் யாரும் களத்தில் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அப்போது எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் தூத்துக்குடியின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டோம். அன்றைய துணை முதல்வர் மற்றும் தொகுதியின் எம்.பி. உள்ளிட்டோரும் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றார்.

மேலும், கரூரில் அப்போதைய தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிப் பார்க்காமல் புறமுதுகு காட்டிச் சென்றவர்கள் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் திமுகவினர் வசூல் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும். இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகாரம் உள்ளது என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை கைவிட்டு, பல்வேறு கட்சிகளில் இருந்த அமைச்சர் நிர்மல்குமார் இனியாவது அரசியல் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

"போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

3 days ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடி

1 week ago

testing

1 week ago

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்; மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்: தூத்துக்குடியில் டாக்டர் செல்லக்குமார் பேட்டி

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்