Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்: தூத்துக்குடியில் டாக்டர் செல்லக்குமார் பேட்டி

Admin 2 weeks ago தூத்துக்குடி
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான குரலை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
தூத்துக்குடி, ஜூலை 20:

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் நல்லாட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதற்காக 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நீட் பயிற்சி மையங்கள் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான குரலை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

இந்த கருத்துகளை வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர், டாக்டர் செல்லக்குமார் முன்னிலையில் சுரேஷ் பெர்னான்டோ மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மேலும் செய்திகள்

"போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

3 days ago

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4 days ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடி

1 week ago

testing

1 week ago

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்; மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்