Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

Admin 4 days ago தூத்துக்குடி
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, இருப்பிடம், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் கட்டாயமாக வழங்க வேண்டும்
சென்னை, ஜூன் 15:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக ‘வி த லீடர்ஸ்’ இயக்கத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தொடர்புடையவர்களாக கைது செய்யப்படுவது கவலைக்குரியதாக உள்ளது என்றார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வருவது இயல்பானது என்றாலும், அவர்களின் முழு விவரங்கள், பணியிடம் மற்றும் தங்குமிடத் தகவல்கள் அரசிடம் முறையாக பதிவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, இருப்பிடம், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும், அவற்றை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

3 days ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

4 days ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

6 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

6 days ago

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்