Advertisement

Share On
District News

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு நகையை தர மறுப்பு: எஸ்.பி.யிடம் வணிகர் சங்கம் புகார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததில் குறைபாடு இல்லை என தகவல்

Admin 1 week ago தூத்துக்குடி
பணத்தை மீட்டுத்தர வணிகர் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி, செப்.21:

 தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் செயல்பட்டு வரும் வேலவன் ஸ்டோர்ஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு, அடமானத்தில் இருந்ததாக கூறப்படும் 5 பவுன் தங்க நகையை நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் ஏமாற்றியதாக கூறப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிறுவனத்தின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
1789977217_1005328963.jpg
புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவர் வேலவன் ஸ்டோர்ஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர் என்றும், இதன் மூலம் அவர் நிறுவனத்தினருக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11.09.2026 அன்று வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு வந்த இசக்கிராஜ், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் வாங்கிய 5 பவுன் தங்க நகையை தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்திருப்பதாகவும், அந்த நகையில் எடை குறைவு இருப்பதாக ஆடிட்டிங் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அடமானத்தில் உள்ள நகையை உடனடியாக மீட்டு நிறுவனத்திடம் கொண்டு வந்தால், நகையை பரிசோதனை செய்து, உண்மையில் எடை குறைவு இருந்தால் அதே எடைக்கு புதிய நகையை மாற்றித் தருவதாக வேலவன் ஸ்டோர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு இசக்கிராஜ், தன்னிடம் தற்போது நகையை மீட்பதற்கான பணம் இல்லை என்றும், நகையை மீட்காவிட்டால் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் போலீசில் புகார் அளிக்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நகையை மீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னர் நகையை பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக ரூ.4,22,000 வழங்கினால் பின்னர் அந்தத் தொகையை நிறுவனத்திடம் செலுத்திவிட்டு நகையை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் இசக்கிராஜ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வார்த்தையை நம்பி, உதவி செய்யும் நோக்கில் நிறுவன நிர்வாகத்தின் ஒப்புதலுடன், வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவன மேலாளர் சரவணக்குமார், கடந்த 11.09.2026 அன்று ரூ.4,22,000 தொகையை இசக்கிராஜின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 5 பவுன் தங்க நகையை மீட்டு வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு இசக்கிராஜ் கொண்டு வந்ததாகவும், அங்கு நகை அவரது முன்னிலையிலேயே பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது நகையின் தரம் தொடர்பாக கடை நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 5 பவுன் நகையை நிறுவனத்திடம் ஒப்படைக்காமலும், நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.4,22,000 தொகையை திருப்பிச் செலுத்தாமலும் இசக்கிராஜ் அங்கிருந்து சென்றுவிட்டதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்களை நம்ப வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக வலைதள பதிவுகள் குறித்தும் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவன மேலாளர் சரவணக்குமார் அளித்த புகார், தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலையத்தில் CSR No.584/2026 ஆக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 4 அல்லது 5 நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் வணிக நிறுவனம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததாக தகவல்

மேலும், கடந்த 4 அல்லது 5 நாட்களில் வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நகைகள் வாங்கிய 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள தங்க நகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பரிசோதனை செய்து பார்த்ததாகவும், அந்த நகைகளில் எவ்வித குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் வணிகர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் பல்வேறு தகவல்களால் வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், உண்மை நிலையை உரிய முறையில் விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வணிக நிறுவனங்கள் தொடர்பான இதுபோன்ற பிரச்சினைகளால் வணிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு, சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தொழில் செய்வதில் தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகக் கூடும் எனவும் வணிகர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இசக்கிராஜ் மீது உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கியதாக கூறப்படும் ரூ.4,22,000 தொகையை மீட்டுத்தரவும், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தொடர்புடைய பதிவுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு பரப்புகின்றன: பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ்

1 day ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு எதிராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்பு

1 week ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு “திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது” – என் பி ராஜா

1 week ago

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

1 week ago

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார சேவைகள் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்

2 weeks ago

.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி திறக்கப்படாமலேயே தூர்ந்து போன அவலம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்