Advertisement

Share On
District News

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார சேவைகள் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்

Admin 2 weeks ago தூத்துக்குடி
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்து வழிபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன - அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்
தூத்துக்குடி, செப்.16:

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்து வழிபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

26.09.2026 அன்று ஸ்ரீ குருவாயூர் அம்பல அலங்கார சேவையும், 03.10.2026 அன்று ஸ்ரீ பத்மாவதி தாயார் அலங்கார சேவையும் நடைபெற உள்ளன. தொடர்ந்து 10.10.2026 அன்று ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி அலங்கார சேவையும், 17.10.2026 அன்று ஸ்ரீ ராஜாங்க அலங்கார சேவையும் நடைபெற உள்ளன.1789565818_1005310151.jpg

இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், பிராகாரத்தை சுற்றி வருவதற்கு தற்காலிகமாக வசதி இருக்காது. சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் நேரடியாக வெளியே செல்லும் வகையில் உரிய வழித்தட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், பக்தர்கள் அதிகளவில் வந்தாலும் அனைவருக்கும் தேவையான அளவு பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

பேட்டியின்போது சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர்கள் ஜெயலெட்சுமி, மகேஷ்வரன் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு பரப்புகின்றன: பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ்

1 day ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு எதிராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்பு

1 week ago

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு நகையை தர மறுப்பு: எஸ்.பி.யிடம் வணிகர் சங்கம் புகார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததில் குறைபாடு இல்லை என தகவல்

1 week ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு “திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது” – என் பி ராஜா

1 week ago

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

1 week ago

.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி திறக்கப்படாமலேயே தூர்ந்து போன அவலம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்