Advertisement

Share On
District News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு “திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது” – என் பி ராஜா

Admin 1 week ago தூத்துக்குடி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு - என் பி ராஜா
தூத்துக்குடி செப்.17:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் என் பி ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் இந்தியர் கட்சி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது என்றார்.

தமிழகத்தில் விலைவாசி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தேவையற்றது. மின்சார உற்பத்தியை அதிகரிக்க சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் ராஜா பெரியசாமி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நாம் இந்தியர் கட்சியும் தனது அரசியல் நிலைப்பாடுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது நிர்வாகிகள்  பொன்ராஜ், ஜெய்கணேஷ் மற்றும்  பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்

எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு பரப்புகின்றன: பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ்

1 day ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு எதிராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்பு

1 week ago

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு நகையை தர மறுப்பு: எஸ்.பி.யிடம் வணிகர் சங்கம் புகார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததில் குறைபாடு இல்லை என தகவல்

1 week ago

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

1 week ago

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார சேவைகள் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்

2 weeks ago

.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி திறக்கப்படாமலேயே தூர்ந்து போன அவலம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்