Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் நெடுஞ்சாலைகளில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை- நாம் தமிழர் கட்சியினர் நெடுஞ்சாலைத்துறைக்கு மனு

Admin 2 weeks ago தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மனு
தூத்துக்குடி மே;14

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் அதிக அளவில் வளர்ந்துள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை உடனடியாக அகற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருமதி கோமதி சங்கரியை நேரில் சந்தித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல சாலைகளின் இருபுறங்களிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாத நிலை உருவாகி விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையோர முட்செடிகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அவசர சேவை வாகனங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும், மழைக்காலங்களில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடைவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றிய குருதிக்கொடை பாசறை செயலாளர் விக்னேஷ், துணை செயலாளர் வினோத், தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) துணை செயலாளர் பிரைட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு கடும் உத்தரவு

2 weeks ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ₹1,337 கோடியாக உயர்வு - இயக்குநர் சலி எஸ். நாயர்.

1 month ago

கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் 3 வது வார்டு பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

1 month ago

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

1 month ago

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

1 month ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 month ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்