Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் 3 வது வார்டு பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

Admin 1 month ago தூத்துக்குடி
கவுன்சிலர் ஆர் ரெங்கசாமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி, ஏப்.18:
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா டீ கடையில் தொடங்கி, கே.டி.சி. நகர், எஸ்.எம்.டி. ஹவுசிங் போர்டு, கொத்தனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக கவுன்சிலரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இந்த பிரசாரத்தில் தொமுச முன்னாள் செயலாளர் எஸ்.இடிசி முத்துராஜ், முன்னாள் தலைவர் பால்ராஜ் முன்னிலையில் செல்வராஜ், பாலு, டேவிட் ராஜ், சேவியர், ஜெகதீசன், கலை இலக்கிய அணி முருகேசன், ரத்தினவேல், கோபால், ராஜாமணி, சுப்புராஜ், வீரப்பன், ராஜேஷ், சங்கர் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் அணியினர் உற்சாகமாக களமிறங்கி, திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கினர். கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எடுத்துக்கூறப்பட்டன.

மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு வரும் 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மகளிரணி நிர்வாகிகள் அமுதா, சுகுமாரி, இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளும் பொதுமக்களிடம் விளக்கப்பட்டன.

ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு, 3வது வார்டு முழுவதும் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

சாத்தான்குளம் நெடுஞ்சாலைகளில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை- நாம் தமிழர் கட்சியினர் நெடுஞ்சாலைத்துறைக்கு மனு

2 weeks ago

21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு கடும் உத்தரவு

2 weeks ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ₹1,337 கோடியாக உயர்வு - இயக்குநர் சலி எஸ். நாயர்.

1 month ago

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

1 month ago

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

1 month ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 month ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்