Advertisement

Share On
District News

மாணவர்களுக்கு சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த முடிவு

Admin 1 month ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் செய்தியாளர் சந்திப்பு
தூத்துக்குடி, ஜூன் 27:

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை காலை தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரே உள்ள கைலாஷ் மஹாலில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

"இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. குறிப்பாக நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான குழப்பங்களும், தேர்வுகள் தள்ளிப்போவதும் மாணவர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான, சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகும்.

இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தற்போது உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

இந்தக் கொள்கையை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

பனை மேம்பாட்டு கழகம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்பு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பாராட்டு, நன்றி

10 hours ago

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

3 days ago

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

2 weeks ago

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

1 month ago

விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 month ago

மகனை மண்வெட்டியால் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் –II தீர்ப்பு

6 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்