தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைபொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்-தமிழக அரசுக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைபொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்-தமிழக அரசுக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!.

நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வரை 13 பேர் பலியாகி உள்ளனர். 

எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதமிழகத்தில் கள்ளச்சாராயம் , போதைபொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் அதோடு தேர்தல் பரப்புரையில் ஆளும் கட்சி கூறியது போல் பூரணமதுவிழக்கை அமல் படுத்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடியில் இருந்து மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தனது அறிக்கையின் மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை செயல்படுத்தவில்லை என்றால் பொதுமக்களின் பேரெதிர்ப்பால் தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அரசு இனி எப்போதும் ஆட்சி அமைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்படும் என மக்கள் நல உரிமை அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.